இறைநிலையை எய்துவார்க்கு உறவினர்
வேண்டியவரல்லர்

356. அம்மையாற் றவங்க டாங்கி 1யலர்ந்தநல் லறிவி னாலும்
இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும்
செம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு
மெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே.
 

     (இ - ள்.) வேந்தே - அரசனே!, அம்மையால் தவங்கள் தாங்கி - முற்பிறப்பின்
நல்வினையால் தவங்களைச் செய்து, அலர்ந்த நல்லறிவி னாலும் - விரிந்துள்ள
மெய்யறிவினாலும் இமமையால் உடம்பு நீங்கி - இப்பிறப்பின்கண் உடலானது நீங்கப்பெற்று,
இகந்துபோம் இயற்கையாலும் - விலகிப் போகின்ற இயல்பினாலும், செம்மையால் -
சிறப்பினால், கடவுள் தானம் சேர்வதே சிந்தையாற்கு - கடவுளின் நிலையை அடைதலே
எண்ணமாகவுடையவனுக்கு, மெய்ம்மையால் - உண்மையாக, கருமச் சுற்றம் வேண்டுவது
இல்லை - வினைசெயற்குத் துணையாவராகிய மனைவி மக்கள் முதலாயினோர்
வேண்டியவராகார் (எ - று.)
வீடுபேற்றில் விருப்புள்ளவர்கள் உலகச் சுற்றத்தை விரும்பார்கள் என்க.

( 118 )