(இ - ள்.) அரும்புசூழ் தெரியலான் - அரும்புகளைச் சூழவமைத்துக் கட்டப்பெற்ற மாலையையணிந்த அரசன், கரும்புசூழ் கிளவியர் - கரும்பினது இனிமையானது அமையப்பெற்ற சொற்களையுடைய மங்கையர், சுரும்புசூழ் பிணையலும் - வண்டுகள் மொய்க்கப்பெற்ற மாலையையும், சுண்ணமாரியும் - நறுமணப் பொடிகளின் மழையையும், சொரிந்து கைதொழ - மிகுதியாகப் பெய்து கையெடுத்து வணங்க, நிரம்பு நூல் நிமித்திகன் - சோதிட நூற்புலமை நிறைந்த சதுவிந்துவினுடைய, மாட நீள்கடை - வீட்டின் நீண்ட வாசலை, அருளின் எய்தினான் - அன்போடு அடைந்தான் (எ - று.) |