(இ - ள்.) மன்னன் - அரசன், கொண்டு அமர்ந்து - நிமித்திகன் கூறிய வாழ்த்துரையை மனமுவந்து கொண்டு விருப்பத்துடன், அகில்புகை கழுமி - அகில்புகை நிரம்பி, கோதைவாய் விண்டு - மாலையின் மலர்கள் நன்குவிரிந்து, மதுக்கள் அமர்ந்து ஒழுகுவ - தேன்துளிகள் நெருக்கமாகச் சிந்துவனவற்றின் மேல், வண்டு அமர்ந்து வீழ்ந்து உராய் ஒலி செய - வண்டுக்கூட்டங்கள் விரும்பி உலாவி முரலாநிற்பக் காரணமான, மருங்குல் கொண்டது ஓர் மண்டபமணித்தலம் எய்தினான் - பக்கங்களையுடையதாய் அமைந்துள்ள மண்டபத்தின்கண் அழகிய ஓர் இடத்தை அரசன் சேர்ந்தான் (எ - று.) |