(இ - ள்.) பொன் சுடர் சுலாம் இழைபொறுத்த - பொன்னினது ஒளிபரவுகின்றனவும் மணிகள் வைத்திழைக்கப் பெற்றனவுமாகிய, பூண் - அணிகலன்களை அணிந்த, முலை - முலையினை உடையவளும், மின்சுலாம் - மின்னல்போன்று துவளும், நுடங்கு இடை - ஒசியாநின்ற இடையினையும் உடைய, மெல்லியாள் திறம் - மென்மைமிக்க அச்சுயம்பிரபையின் பெருமை, என்சொலால் - ஆற்றலிலாத என்னுடைய எளிய சொற்களாலே, இன்று - இப்பொழுது, யான் இயம்பும் - யான் கூறுதற்கு, நீரதோ - எளிமையுடையதேயோ, மன்சுலா அகல - பகை மன்னர்கள் மனம் சுழன்று ஓடுமாறு, நின்று - மறத்தோடேபொருந்தி, அலரும் - விளங்கும், வாளினாய் - வாட்படையை உடைய வேந்தனே (எ - று.) வாளினாய் இயம்பும் நீரதோ எனக்கூட்டுக. |