(இ - ள்.) ஏவலாய் - எய்தற் றொழில் வல்ல வேந்தனே!, மூவகை உலகினுள் நடுவண் - மண்ணகம் விண்ணகம் பாதலம் என்னும் மூன்றுவகை உலகத்துள் நடுவிடத்ததாய்ப் பொருந்தியுள்ளதும், மூரிநீர்த் தீவினது அகலமும் - பெருமைபொருந்திய நீராகிய கடலாலே சூழப்பட்டதுமாகிய மண்ணுலகத்தினது பரப்பும், சிந்துவட்டமும் - கடல்வளைவும், ஓவல - ஒன்றைவிட்டு ஒன்று நீங்காவாய், ஒன்றுக்கு ஒன்று இரட்டி கண்ணறை - ஒன்றைப் பார்க்கினும் மற்றொன்று இரட்டிப்பான இடப்பரப்பினையுடையதாய், விரிந்தவை எண்ணிறந்த - பரந்துள்ள உலகங்கள் கணக்கற்றனவாகும் (எ-று.) சிந்து - கடல். கண்ணறை - அகலம். ஏவலாய் - விளி. |