(இ - ள்.) இவ் அவனி வட்டம் - இந்த உலக வளைவானது, மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது - மந்தரம் என்னும் பெயரையுடைய நீண்டமலை நடுவிடத்திலே அமையப்பெற்றது, மருங்கு சுந்தர வேதிகை சூழ்ந்தது - சுற்றிலும் அழகிய திண்ணையாலே சூழப்பெற்றது, நந்திய நளிசினை நாவல் மாமரம் - தழைத்துக் குளிர்ச்சி யமைந்த நாவல் என்னும் பெயரினையுடைய பெரியமரத்தை, அந்தரத்து உடையது - அந்த மந்தர மலையின் நடுவிடத்திலே அமையப்பெற்றது (எ - று.) இதனால் உலகம் அமைந்தள்ள நிலைமையை உணர்த்தினார். |