(இ - ள்.) மாற்று அறு - ஒப்பற்ற, மண்டிலம் அதனுள் - இம்மண்ணுலகத்தே, ஊழியால் - முறைமையாலே, ஏற்றிழிபு - உயர்வுதாழ்வுகள், உடையன - தம்முள் உடையன, இரண்டு கண்டமாம் - இரண்டு கண்டங்கள் உளவாம், தேற்றிய - அவ்வாறு உளவாகக் கூறப்பட்ட, இரண்டினும் - அவ்விரண்டனுள், தென்முகத்தது - தென்றிசைக்கண் உள்ள கண்டம், பாற்று அரும் புகழினாய் - தவிர்த்த லரிய புகழையுடையோனே, பரதகண்டமே - பரதகண்டம் எனப்படும் (எ - று.) இரண்டு கண்டத்துள் பரதகண்டம் தெற்கின் கண்ணது என்க. |