(இ - ள்.) பொங்கிய புரவியாய் - மிகுதியான குதிரை களையுடையவனே! வெங்கதிர்ப் பரிதியும் - வெவ்விய ஒளியினையுடைய ஞாயிறும், தண்பனி விரவு அங்கதிர் வளையமும் - மிகுந்த குளிர்ச்சியானது பொருந்தப்பெற்ற திங்கள் வட்டமும், ஆதியாயின - முதலாயினவற்றை, இங்கு இவர் படைத்தனர் - இவ்வுலகத்தில் நான்முகனானவர் உண்டாக்கினார், போக காலம் இவ்வகை இழிந்தது - போக பூமியாக அமைந்திருந்த காலமானது இவ்வாறு சென்றது (எ - று.) ஞாயிறு திங்கள் முதலியவைகளை நான்முகனார் படைத்தனர். இவ்வாறு போக காலம் போயது என்க. |