(இ - ள்.) கான்உடை விரி திரை வையம் காக்கிய - காடு களையுடையதும் கடலாலே சூழப்பெற்றதுமாகிய உலகத்தைப் புரத்தற் பொருட்டு, மானுட உடம்பினால் மறைந்துவந்த - மக்கள் யாக்கையைக்கொண்டு தேவ வடிவந்தோன்றாமல்வந்த, அத் தேனுடை அலங்கலான் தெய்வமார்பகம் - தேன் பொருந்திய மாலையினையுடைய அந்தத்திவிட்டனின் தெய்வத்தன்மை பொருந்திய மார்பிடத்தை, தையல் தான் அடைந்து அமர்வதற்கு உரியள் - சுயம்பிரபையானவள் சேர்ந்து பொருந்துவதற்கு உரிமையை உடையவள் ஆவள் (எ - று.) சுயம்பிரபை அந்தத் திவிட்டனுக்கே உரியவள் என்று நிமித்திகன் உறுதியுடன் கூறுகிறான். |