(இ - ள்.) கொங்கலர் தெரியலான் திறத்தில் - மணத்தை வெளிப்படுத்தும் மலரால் தொடுக்கப்பெற்ற மாலையை அணிந்த மணமகனைத் தேடும்செயலில், கொள்குறி - அறிந்துகொள்ள வேண்டிய அறிகுறி, இங்குயான் இசைத்ததே அமையும் - இப்போது நான்கூறியதே போதும், அல்லது - இதனையல்லாமல், ஓர் திங்கள் நாள் அகவையில் - ஒரு திங்கள் கால அளவில், திவிட்டன் - மேற்கூரிய திவிட்டனானவன், ஒருசிங்கம் வாய் பிளந்திடும் - ஓர் அரிமாவின் வாயைப்பிளந்து கொல்வான், இது தெளி என்ன - இதனை உணர்ந்துகொள்வாயாக! என்றுகூற, ஆங்கு, அசைநிலை (எ - று.) திவிட்டனுடைய தன்மையை உணர்ந்துகொள்வதற்கு நிமித்திகன் ஓர் அறிகுறியை குறிப்பிட்டான். |