(இ - ள்.) இருநிலத் தலைமகன் - பின்னர் பெரிய உலகத்தை ஆளும் அச்சடி மன்னன், செம்பொன் மாரியா சொரி நிதி - செம்பொன்னையே மழையாகப் பொழியாநின்ற செல்வத்தையும், புனல் உடை - நீர்வளத்தையும் உடைய, சோதிமாலை என்று - சோதிமாலை என்று பெயர் கூறப்பட்ட, அருநிதி வளம் கொள் - பெறுதற்கரிய செல்வ வளமிக்கதொரு நாட்டை, நூல் கடல் திருநிதிச் செல்வன் ஆள - நூலாகிய கடலிலே தோன்றும் அழகிய அறிவுச்செல்வத்தை யுடையவனான அச் சதவிந்து என்பான் ஆளும்படி, நல்கினான்-முற்றூட்டாக வழங்கினான் (எ - று.) குறியுரைத்த நிமித்திகனுக்கு நன்கொடையாகச் சோதிமாலை என்னும் நாட்டை நன்கொடை வழங்கினான் சடியரசன் என்க. என்று - என்ற. |