குலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்

414. தலைமகன் றாடனக் காகச் 2சாகைய
நிலைமைகொண் 3மனைவியா நிமிர்ந்த பூந்துணர்
நலமிகு மக்களா 4முதியர் தேன்களாக்
குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே.
 

     (இ - ள்.) குலமிகு கற்பகம் - அரசகுலம் என்று மேன்மையாகச் சொல்லப்பெறுகிற
கற்பக மரமானது, தாள் தனக்கு ஆக தலைமகன் - எல்லாவற்றையுந் தாங்கும் அடி
மரமாகத் தலைவனையும் சாகை - அம்மரத்தின் கிளைகள், நிலைமைகொள் மனைவியா -
நல்ல தன்மையைக் கொண்டுள்ள மனைவியராகவும், சாகைய நிமிர்ந்த பூந்துணர் -
அக்கிளை களினின்றும் வெளிப்பட்டுத் தோன்றும் பூங்கொத்துக்கள், நலம்மிகு மக்களா -
அறிவமைந்த மக்களாகவும், முதியர் தேன்களா - முதியோர்கள் தேனகளாகவும், குளிர்ந்து தோன்றும் - களிப்புடன் காணப்பெறும். (எ - று.)
சாகைய என்பதனைப் பிரித்துச் சாகை மனைவி என்னும், பின்னர்ச் சாகைய பூந்துணர்
என்றும் கூட்டுக.்

( 176 )