சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல
அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்

425. தாங்கிய முலையவ 1டிருவும் வெம்முலைக்
கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந்
தாங்கிய புகழவன் மொழியத் தாரவர்
2தேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார்.
 

     (இ - ள்.) தாங்கிய புகழவன் - புகழைத் தாங்கிய அரசன், வீங்கிய முலையவள்
திருவும் - பெருத்த கொங்கைகளையுடைய சுயம்பிரபையின் சிறப்பையும், வெம்முலைக்கு
ஓங்கிய முகிலவன் உரிய பெற்றியும் - விருப்பத்தை யுண்டாக்குகின்ற சுயம்பிரபையின்
கொங்கைகளைத் தழுவுதற்குப் பிறந்து சிறந்துள்ள முகில் வண்ணனாகிய திவிட்டனது
பெருமையையும்; மொழிய - கூற, தாரவர் - மாலைகளையணிந்தவர்களாகிய அமைச்சர்கள்,
தேங்கிய உவகையர் - மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தவர்களாய், தெரிந்து சொல்லினார் -
மேலே நடைபெற வேண்டிய செயல்களையுணர்ந்து சொல்லலானார்கள், (எ - று.)

( 187 )