(இ - ள்.) கற்றவன் - எல்லா நூல்களையும் நன்கு கற்றவன், கற்றவன் கருதும் கட்டுரைக்கு - கற்றவனாகிய பிறனொருவன் கருதியுரைக்கும் உறுதியான சொல்லுக்கு, உற்றனஉற்ற - நன்கு பொருந்துபவைகளை, உய்த்து உரைக்கும் ஆற்றலான் - நன்கு ஆராய்ச்சி செய்து சொல்லும் அறிவாற்றலுடையவன், அவன் - இத்தன்மைகளெல்லாம் இனிதமைந்த அவன், மருசியே - மருசியென்பவனேயாவன், அவனை நாம் விட - அவனை நாம் தூதாக அனுப்பினால், சுற்றமுங் கருமமும் சொல்ல வல்லன் - நமக்கும் பயாபதி மன்னனுக்கும் ஏற்படப்போகிற உறவு முறையையும் செய்தியையும் விளக்கமாகச் சொல்லுதற்கு வல்லவனாவன், (எ - று.) |