கோங்கு முதலியன

435. குடையவிழ்வன கொழுமலரின 2குளிர்களியன கோங்கம்
புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம்
கடியவிழ்வன கமழ 3பாதிரி கலிகளிகைய 4சாகம்
இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே.
 

     (இ - ள்.) கோங்கம் - கோங்கமரங்கள்; குடை அவிழ்வன - குடை விரிக்கப்பட்டாற்
போன்று மலர்வன; கொழுமலரின - அவைகள் செழிப்பாகவும் உள்ளன; குளிர்களியன -
குளிர்ந்து களிப்பையும் உண்டாக்குவன; புன்னாகமொடு இலவம் - புன்னையுடனே இலவ மரங்கள்; புடை அவிழ்வன - புதுமலர் களையுடையன; பக்கங்களிலே மலர்வனவாகிய புதிய மலர்களையுடையன; கமழ்பாதிரி - மலரால் நறுமணத்தை வெளிப்படுத்தும் பாதிரிமரங்கள், கடிஅவிழ்வன - மணத்தை வெளிப்படுத்துவன; சாகம் - தேக்கு மரங்கள்; கலிகளிகைய - செழிப்பான மலர் மொட்டுக்களை யுடையன; இடை - இம்மரங்களுக்கிடையே; அவிழ்வன - பல செடி கொடிகளிலிருந்து மலர் வனவான; மலர்அளவுஇல - பூக்கள் கணக்கற்றனவாம்; இது பொழிலினது இயல்பு - இஃது அந்த புட்பகரண்டமென்னும் பூங்காவினது தன்மை
யாகும் (எ - று.)

இச் செய்யுளில் கோங்கு முதலிய சில மரங்களைக் கொண்டிருப்பதைக் கூறிப் பொழிலின
இயல்பை ஒருவாறு முடிக்கின்றார். கோங்கின்முகை கொங்கையை ஒத்திருக்க அது மலர்ந்த
நிலையில் தட்டுப்போல விளங்குமாதலின் கோங்கு மலர்ந்தவற்றை கோங்கம்
குடையவிழ்வன கொழுமலரின என்றார்.

( 5 )