வண்டுகள் ஒலித்தல்

452. கணங்கெழு 4கலாவமொளி காலுமக லல்குல்
சுணங்கெழு 5தடத்துணை முலைச்சுமை யிடத்தாய்
வணங்கியும் நுணங்கியும் 6வருந்திய மருங்கிற்
கிணங்குதுணை 7யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே.
 

     (இ - ள்.) கணங்கெழு கலாவம் ஒளிகாலும் - கூட்டமாகப் பொருந்திய
மணிக்கோவையானது ஒளியைச் செய்யும், அகல் அல்குல் இடத்தாய் - அகன்ற அல்குலுக்கு
மேலிடத்ததாகிய, சுணங்குஎழு - தேமல்பொருந்திய, தடத்துணை முலைச்சுமை - பெருத்த
இரண்டாகிய கொங்கைச் சுமையினால், வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்கு -
வளைந்தும் அசைந்தும் வருத்தத்தை யடைந்த இடைக்கு, இணங்கு துணையாய் -
பொருந்திய துணையாகி, ஞிமிறு எழுந்து இரங்கின - வண்டுக் கூட்டங்கள் எழுந்து
இரங்கினாற்போல ஒலித்தலைச் செய்தன, (எ - று.)
இடையின் வருத்தங்கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க.

( 22 )