454. துடித்ததுவர் வாயொடுது ளும்புநகை 4முத்தம்
பொடித்தவியர் நிரொடுபொ லிந்தசுட 1ரோலை
அடுத்ததில கத்தினொட ணிந்தவள 6கத்தார்
வடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார்.
 

     (இ - ள்.) துடித்த துவர் வாயொடு - துடிக்கின்ற பவளம் போன்ற செவ்விய
வாயினோடே, நகை - பற்களாகிய, முத்தம் - முத்துவரிசை, துளும்பும் - மிளிருகின்றவரும்,
பொடித்த வியர் நீரொடு - நாணத்தாலே முகிழ்த்த வியர்வை நீரோடே, பொலிந்த சுடர்
ஓலை - பொலிவுற்ற ஒளியுடைய பொன்னோலையை அணிந்தவரும், அடுத்த -
பொருந்திய, திலகத்தினொடு - பொட்டினோடே, அணிந்த - ஒப்பனை செய்யப்பட்ட,
அளகத்தார் - கூந்தலையுடையவருமாகிய மகளிர்கள், முகத்து - தம்முகத்தேயுள்ள, வடித்த
சிறுநோக்கொடு - தெளிவுற்ற சிறிய காமக் குறிப்புடைய நோக்கத்தாலே, தொழில் வகுத்தார்
- காமத் தொழிலை விளைப்பாராயினர், (எ - று.)
நோக்கொடு - என்பதன்கண் உள்ள ஒடுவுருபை ஆல் உருபு ஆக்குக. நோக்கம் -
கண்களவு கொள்ளும் சிறு நோக்கம் என்க. இச் சிறுநோக்கம் மேல் காமத்தொழில்
நிகழ்தற்குக் காரணமாகலின், நோக்கினாற் றொழில் வகுத்தார் என்க.

( 24 )