(இ - ள்.) மைந்தர்கள் - ஆடவர்கள், நெய அலர் குழல் தொகை - நெய்யணிதலாலே மிகச் சிறந்து விளங்குகிற கூந்தல் தொகுதியானது, நெருப்பின் அடும் என்பார் - தீயைப்போலச் சுடுகின்றது என்றுகூறுவார்கள், மைஅலர் நெடுங்கண் இவை - மையணிதலாலே மலர்ந்துள்ள நீண்ட கண்களாகிய இவை கொலைவல்ல என்பார் - ஆடவர்களைக் கொலைபுரிதலிலே சிறந்தவைகள் என்று கூறுவார்கள், தொய்யில் இள மென் முலையில் - தொய்யில் எழுதப்பெற்றவையும் இளமையையுடையவையுமாகிய மெல்லிய கொங்கைகளால், நீர் சுடுதிராயின் - நீவிர் எங்களைச் சுட்டு வருத்துவீர்களானால், உய்யலம் எனத்தொழுது உடைந்தார் - நாங்கள் உயிர்வாழமாட்டோம் என்றுகூறி வணங்கி வருந்தினார்கள், (எ - று.) |