சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறு அன்னங்கள்

46. காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்
பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும்
தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென
வாவிவா யிளவனம் மயங்கு மென்பவே.
 
     (இ - ள்.) காவிவாய் கருங்கணார் - கருங்குவளை மலரின் தன்மை யமையப்பெற்ற
கரிய பெரிய கண்களையுடைய பெண்களினது; காமர் பூ சிலம்பு - அழகிய
விளக்கத்தையுடைய காலணிகள்; ஆவிவாய் மாளிகை - அகிற்புகைபொருந்திய வீடுகளிலே;
அதிரக் கேட்டொறும் - ஒலிக்கக் கேட்கும்பொழுதெல்லாம்; தூவி வான்பெடை -
ஆண்டுவளர்க்கப்படும் தூவியையுடைய சிறந்த பெடையன்னங்கள்; துணை துறந்த
கொல்என - தம் துணையாகிய ஆண் அன்னங்களை நீங்கினவோ என்று; வாவிவாய் -
தடாகத்திலே உள்ள; இள அனம் மயங்கும் - இளமையுடைய அன்னங்கள் மயங்கி
வருந்துதலையடையும். என்ப - ஏ, ஈற்றசைகள். (எ - று.)

     காவி-கருங்குவளை. காமர் - அழகு, மாளிகையிடத்தே உண்டான சிலம்பொலியை
மாடத்துள்ள அன்னப்பெடையின் குரலென்று கருதி வாவியிலுள்ள அன்னங்கள் அவை
துணை பிரிந்தனவோ என்று அவற்றிற் கிரங்கின என்பது கருத்து. இது மயக்கவணி.
அன்னங்கள் துணைபிரியிற் பெரிதும் வருந்து மியல்புடையன; இதனை “புல்லு விட்டஞ்சிறைஅன்னங்களை வளர்க்கும் வழக்கத்தை “தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து,
நெடுமயிரெகினத் தூநிற ஏற்றை, குறுங்கால் அன்னமொடு உகளும் முன்றில்“ எனவரும்
நெடுநல்வாடையான் அறிக. ( 91-2 )

(11)