462. மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் 3டிலாதான்
தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார்
என்னை பாவ4மிங் கிவர்களைப் படைத்தன னிதுவால்
பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல்கண்ட வகையே.
 

     (இ - ள்.) மன்னுவார் - தவத்தின்கண் நிலைபெறுவோர், சிலைமதனன் ஓர் வடிவு
கொண்டிலாதான் - கரும்பு வில்லையுடைய காமன் தனக்கென ஒரு உருவம் இல்லாதவன்,
தன்னை - அத்தகையனை, யாமும் ஓர் தகைமையின் தணத்தும் - யாமும் ஒப்பற்ற
நம்முடைய தகுதியாலே வென்று அவன் ஆட்சியினின்று பிரிந்துபோவேம், என்று
இருப்பார் - என்று துணிந்து அந்நிலையிலே தங்கியிருப்பார் மன்! ஆங்கு அவன் -
படைப்புக் கடவுளாகிய பிரமன் அவர் கருத்து நிறைவுறாதபடி, இங்கு இவர்களைப்
படைத்தான் - இவ்வுலகத்தே இம்மகளிரை இத்தகைய அழகுடையோராய்ப் படைத்தனன்;
ஆங்கு அவன் பின்னைப் பிறவிக்கு முதல்கண்டவகை இது - அப்படைப்புக் கடவுள், உலகில் பிறவிகள் இடையறுந்தொழியாமைக்கு மீண்டும் ஒரு வழியினைப் படைத்த முறையாம் இது, என்னை பாவம் - இஃதொரு பாவம் இருந்தபடி, (எ - று.)

( 32 )