465. தூம மென்புகை துழாவிவண் டிடை1யிடை துவைக்கும்
தாம 2வோதியர் தம்முகத் தனபிறர் மனத்த
காம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும்
3யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ.
 

     (இ - ள்.) தூம மென்புகை - தூமம் என்னும் மெல்லிய மணப்புகை, துழாவி -
ஊட்டப்பெற்று, வண்டு - வண்டுகள், இடை இடை - நடுவே நடுவே, துவைக்கும் -
மிதிக்கப்பெற்ற, தாமம் - மலர்மாலையை அணிந்த, ஓதியர்தம் - கூந்தலுடைய
அம்மகளிரின், முகத்தன - முகத்தே பொருந்தியனவும், பிறர் - ஆடவருடைய, மனத்த -
நெஞ்சிலே பொருந்தியனவுமாகிய, காமநீள் சிலை - மன்மதனுடைய நீண்ட சிலைபோன்ற
புருவங்கள், கணை, அவனம்புகள்போன்ற கண்களோடே, குனிவ - முரிவதனை, கண்டாலும்
- காணுதல் மாத்திரையே, யாம் - எம் போல்வர், இன் உயிருடையம் - இனிய
உயிருடையேம், என்று - என்று கருதி, இருப்பது - இங்கு உயிர் வாழ்வது, எவனோ -
என்னாகுமோ. (எ - று.)

யாம் உயிருடனிருத்தற்குக் காரணம் இம்மகளிரின் நோக்காலே ஏறுபடாமையே யாம்; ஏறுபடுங்கால் உயிர்போம் என்றபடி.

( 35 )