வேறு
பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்

467. ஆடைகைத் தலத்தொருத்தி 3கொண்டதங் கடைப்பைதன்
மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம்
சேடிகைத் தலத்தன செறிமணித் 4திகழ்வசெங்
கோடிகைத் தலத்தன 5குளிர்மணிப் பிணையலே.
 

     (இ - ள்.) அங்கு - அப்போது அங்குவந்த பெண்களுள், ஒருத்தி கைத்தலத்துக்கொண்டது - ஒருத்தி தன்னுடைய கையினிடத்திலே வைத்திருந்தது, ஆடை - உடையாகும், ஒருத்தி - மற்றொருத்தி, தன் மாடுகைத் தலத்துக்கொண்டது - தன்னிடத்திலே கையில் வைத்திருந்தது, அடைப்பை - வெற்றிலைப்பையாகும், சேடி - வேறொரு பணிப்
பெண்ணின், கைத்தலத்தன - கையினிடத்திலேயிருந்தன, மணிக்கலம் - அழகிய
அணிகலன்களாகும், மற்றொருத்தியினுடைய கையினிடத்திலே, செறிமணித் திகழ்வ செம் கோடிகைத் தலத்தன - நெருக்கமாக மணிகள் பதித்து விளங்குவதாகிய அழகிய பூவேலை செய்யப்பட்ட தட்டினிடத்திலேயிருந்தன, குளிர்மணிப் பிணையல் - குளிர்ந்த மணிகளால் இயன்ற மாலைகள், (எ - று.)

இதனால் பணிப்பெண்களான நான்குமகளிரும் தம் கையிற் கொண்டிருந்த பொருள்களைத்
தெரிவித்தவாறு. பூந்தட்டை யுணர்த்துவதாகிய கோடிகம் என்னுஞ்சொல் கோடிகையெனத்
திரிந்து நின்றது.

( 37 )