அரசர் தெருவழகு | 47. | 1விலத்தைகைப் பூந்துணர் விரிந்த கோதையர் நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய அலத்தகக் 2குழம்புதோய்ந் தரச வீதிகள் புலத்திடைத் தாமரை பூத்த போலுமே. | (இ - ள்.) விலத்தகைப் பூந்துணர் - நீர்நிலையின்கண் உண்டான அழகிய பூங்கொத்துக்கள்; விரிந்த கோதையர் - மலர்ந்துள்ள மாலை அணியப்பெற்ற கூந்தலையுடைய பெண்கள்; நலம்தகை சிலம்பு அடி - நல்ல தன்மை யமைந்த சிலம்பென்னும் காலணியை அணிந்த கால் அடிகளில்; நவில ஊட்டிய - பொருந்தும்படியாக ஊட்டப்பெற்ற; அலத்தகம் குழம்பு தோய்ந்து - செம்பஞ்சுக் குழம்புதோயப்பட்டு; அரச வீதிகள் - அந்நகரத்து அரண்மனைத் தெருக்கள்; புலத்திடை தாமரை பூத்தபோலும் - புலத்திடத்தே தாமரைமலர் மலரப்பெற்றாற் போல விளங்கும். ( எ - று.) விலம் - பிலம் என்பதன் மரூஉ; நீர்நிலை. தகை - அழகு மகளிர் அடிகளில் ஊட்டப்பெற்ற செம்பஞ்சுக் குழம்பின் செந்நிறம் பட்ட இடங்கள் செந்தாமரை பூத்தாற் போன்று விளங்குகின்றன என்க. மகளிர் அடி தாமரை மலர் போலுதலின் அவற்றின் சுவடு தாமரை போன்று தோன்றின என்பது கருத்து, புலம், - வயல், இடம், திசை, திக்கு, நாடு, அறிவு, துப்பு, நூல். | ( 12 ) | | |
|
|