477. 1கொண்டலார்ந்த பொன்னெனிக் குழற்கொடிக்கு ழாமனார்
மண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம்
குண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு 2கொண்டணீஇ
3வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே.
 

      (இ - ள்.) பொன்என் - திருமகள் என்று கூறத்தகுந்த, இக்குழல் கொடி குழாம்
அனார் - இந்தக் கூந்தலையுடைய பூங்கொம்பின் கூட்டம்போன்ற மகளிருடைய, கொண்டல்
ஆர்ந்த மண்டலம் - முகிலிடையே பொருந்திய வட்டவடிவம், நிறைந்த - முற்றுப்பெற்ற,
திங்கள் வட்டம் ஒத்த - திங்களினது வடிவத்தை ஒத்த, வாள்முகம் - ஒளியை உடைய
முகங்கள், குண்டலம் - குண்டலங்களும், கொழும்பொன் ஓலை - கொழுவிய பொன்னால்
இயன்ற ஓலைகளும், என்று - என்று கூறப்பட்ட, இரண்டு கொண்டு - இருவகை
அணிகலன்களாலும், அணீஇ - ஒப்பனை செய்யப்பட்டு அம் மகளிர் சூடிய, வண்டலர்ந்து -
வண்டுகள் மொய்க்கப்பெற்று. மாலைதாழ்ந்து - மாலைகள் தூங்கப்பட்டு, மாடவாய் -
மாளிகையின் வாயில்கள், மறைந்த - மறையலாயின. (எ - று.)

மாடவாய் மகளிரின் குண்டலப் பொன்னோலை மாலை முதலியவற்றால் மறைந்தன என்க.

( 47 )