(இ - ள்.) கூது தும்பி - கூடாநின்ற வண்டுகள், குழல் - கூந்தலின், ஊடுதோய் - அகத்தே பொருந்திய, தொகை - தொகுக்கப்பட்ட, துணர் - பூங்கொத்துக்களை, துதைந்து - உளர்ந்து, ஓடும் - ஊராநின்ற, மேல் எருத்திடை - உயரிய பிடரின் கண்ணே, குலைந்த கோதையோடு - அணி குலைந்து வீழ்ந்த மாலையோடே, உலாய் - அசைந்து, மாடவாயின் - மாடத்தின் வாயிலிடத்தே, மாலை - மாலைகள், ஞால - தூங்கும் படி, மாடம் - அம்மாடத்தை, ஏறும் - ஏறாநின்ற, மாதரார் - மகளிர்கள், ஆடுமஞ்ஞை - ஆடுகின்ற மயில்கள், கோடு - மலைச் சிகரங்களில், கொள்வ - ஏறுவன, என்னலாவது - என்று கூறுமாறு, ஆயினார் - தோன்றலாயினர். (எ - று.) குழலிலே சூட்டிய கோதைகள், பிடரிலே வீழ்ந்தசையும்படி மாடத்திலே ஏறுமாதர் மலைச்சிகரத்தே ஏறும் மயிலை ஒத்தார் என்க. |