479. தொண்டைவாய்1மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம்
கொண்ட2கோல நீரவாய கோடிமாட மேலெலாம்
3வண்டுசூழ்ந்த பங்கயம லர்க்4குழாமி ணைப்படூஉக்
கெண்டையோடு நின்றலர்ந்த கேழவாய்க்கி ளர்ந்தவே.
 

     (இ - ள்.) தொண்டைவாய் மடந்தைமார்கள் - கொவ்வைக்கனி போன்ற
வாயினையுடைய மகளிர்கள், சுடிகை - நெற்றிச் சுட்டியை உடைய, வட்ட - வட்டமான,
வாண்முகம் - ஒளிபொருந்திய முகங்களை, கொண்ட - தம்மகத்தே கொண்டுள்ள, கோல
நீரவாய - அழகுடைய தன்மையை உடையனவாகிய, கோடி - சிகரங்களையுடைய,
மாடவாயெலாம் - மாளிகையின் மேலிடமெல்லாம், வண்டு சூழ்ந்த - வண்டுகள் மொய்த்த,
பங்கயமலர்க்குழாம் - தாமரைப்பூவின் கூட்டம், இணைப்படூஉ - பிணைக்கப்பட்ட,
கெண்டையோடு - கெண்டைமீன்களோடே, நின்றலர்ந்த - நின்று மலர்ந்துள்ள, கேழவாய் -
தன்மையுடையனவாய், கிளர்ந்த - விளங்கின. (எ - று.)

தாமரைமலர் மகளிர்முகத்திற்கும், இணைக்கயல்கள் கண்களுக்கும் உவமைகள்.

( 49 )