(இ - ள்.)பாடகம் - காலணி கலன்கள், துளங்கவும் - அசைந் தொலிப்பவும், பசும்பொன் ஓலை - பசிய பொன்னாலியன்ற காதணி, மின்னவும் - ஒளிரவும், சூடகம் - வளையல்கள், துளும்பவும் - அசைந்தொலிப்பவும், சுரும்பு - வண்டுகள், சூழ்ந்து - தம்மைச் சூழ்ந்து, பாடவும் - பாடா நிற்பவும், ஊடகம் - உள்ளம், கசிந்து - நெகிழ்ந்து, ஒசிந்து - துவண்டு, நின்று - நிலையாக நின்றும், சென்று - போயும், வந்து - மீண்டு வந்தும், உலாய் - உலாவியும், நங்கைமார் - இவ்வாற்றான் மகளிர்கள், நன்னகர் - அந்த நல்ல நகரத்தின் கண்ணே, நாடகங்கள் - கூத்து வகைகளை, நவிற்றினார் - இயற்றா நின்றனர். (எ - று.) விசயனையும் திவிட்டனையும் காணச்செல்லும் மகளிர் துளங்கவும் மின்னவும் துளும்பவும் பாடவும் கசிந்தும் ஒசிந்தும் நின்றும் சென்றும் உலாவுதல் அம்மகளிர் நாடகமாடுதல் போலத் தோன்றிற்று என்பதாம். |