(இ - ள்.) ஆங்கு - அவ்வாறு, அவன் இறைஞ்சலும் - அந்த விஞ்சையன் வணங்கியவுடனே, மலர்ந்த திங்கள் நீள் ஒளி - தோன்றிய திங்களினுடைய வெள்ளிய ஒளியும், பூங்கழல் - பொலிவுபெற்ற வீரக்கழலும், பொலங்குழை - பொன்னினால் ஆகிய காதணியும், பொலிந்து இலங்குதாரினான் அமையப்பெற்று விளங்குபவனாகிய மாலையை அணிந்த விசயனானவன், மரீசியைப்பார்த்து; நீங்க அரும் குணத்தின் நீவிர் - நீங்குதலில்லாத நல்ல குணத்தையுடைய நீர், நீடு குரவர் ஆதலில் - எமக்கு நீண்ட பெருமையையுடைய ஆசிரியரைப் போன்றவர் ஆகையால், ஈங்கு - இப்பொழுது, எமக்கு நீர்பணிந்தது என்னை - எங்களை நோக்கி நீர் வணங்கியது யாது காரணம்பற்றி?, என்று இயம்பினான் - என்று கேட்டான் (எ - று.) எம்மினும் மேம்பட்டவராகிய நீவிர் எம்மை வணங்கியது எக்கார ணத்தினால் என்று விசயன் மருசியைப்பார்த்துக் கேட்கின்றனன் என்க. |