528. மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் 2முயன்று3நோற்றார்க்
கொப்புடைத் 4துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ 5மெல்லாம்
எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா
6தப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான்.
 

      (இ - ள்.) மெய்ப்புடை தெரிந்து - உண்மை நிலையை ஆராய்ந்து, மேலை -
முற்பிறப்பில், விழுதவம் - சிறந்த தவத்தை, முயன்று நோற்றார்க்கு - முயற்சியுடன்
செய்தவர்க்கு, உங்கள் சேரி - நீங்கள் சேர்ந்துள்ள இடமாகிய வித்தியாதர உலகத்தின்,
உயர்நிலை - உயர்ந்த நிலைமையை யுடைய, செல்வம் எல்லாம் - செல்வங்கள் முற்றும்,
ஒப்புடைத்து - நுகர்தற்கு ஏற்றதாகும், எப்படி முயறுமேனும் - மக்களாகிய நாங்கள்
எவ்வளவு முயற்சி செய்தோமென்றாலும், எங்களுக்கு எய்தல் ஆகாது - எங்களால் அந்தச்
செல்வத்தை அடைய முடியாது, அப்படி - அவ்வாறே, நீயும் முன்னர் மொழிந்தனை
அன்றே - நீயும் முன்பு சொன்னாயல்லவா, என்றான் - என்று கூறினான். (பயாபதி
மன்னன்) (எ - று.)

முற்பிறப்பில் தவஞ்செய்தவர்களுக்குத்தான் விஞ்சையராகி இன்புற முடியும். மக்களாகப
பிறந்தோர் எவ்வளவு முயற்சிசெய்தாலும் விஞ்சையர் செல்வத்தைத் துய்த்தல் இயலாது;
இவ்வாறே நீயும் முன்பு சொன்னாயன்றோ, என்று பயாபதி மன்னன் தான்
பேசாதிருந்ததற்குத் தக்க காரணம் கூறினான். “விஞ்சையர் செல்வந்தானும் நுரைமலி
பொள்ளல் யாக்கை மனிதர்க்கு நுகரலாமே“ என்று முன்னர்க் குறிப்பிட்டவைகளை
யெல்லாம் உள்ளத்திற் கொண்டு பயாபதிமன்னன் இவ்வாறு பதிலுரைத்தான். நோற்றார் :
வினையாலணையும் பெயர். நோல் : பகுதி. முயறும் : தன்மைப் பன்மை வினைமுற்று :
முயல் - பகுதி. தும் - விகுதி.

( 98 )