நீ மிகுந்த அறிவாளியாகலின் என் கருத்தை நன்கு அறிந்துள்ளாய்; ஆகவே என் மனக்கருத்து உனக்கு நன்கு விளங்கும். ஆகவே நான் சுவலனசடி யரசனுக்குச் சொல்லவேண்டிய செய்தியை நீயே உணர்ந்து சொல்லலாம். உன்னை முன்னால் வைத்துக்கொண்டு நான் யாதுஞ் சொல்லவேண்டியதில்லை என்று முதலிரண்டடிகளால் குறிப்பிட்ட மன்னவன், பின்னிரண்டடிகளால் நான் அந்த விஞ்சைமன்னனுடைய குறிப்பின் வழியே நடந்து கொள்வேன் என்கிறான். மன்னும் ஓவும் ஈற்றசைகள். |