(இ - ள்.) அள் இலை செழும் பலவின் - செறிந்த இலைகளாற் றழைத்த பலாமரத்தினது, ஆர் சுளை - நிரம்பிய சுளைகளையும், முள் - புறந்தோலின்கண் முட்களையும், உடைக்கனி - உடைய பழம் முறுகி - முதிர்ந்து, விண்டு என - வெடித்தனவாக அவை, கள் உறைத்தொறும் - தேனை இடையறாது துளித்தலால், கழுமி - அத்தேன் பெருகி, ஊற்றறா - அருவியாகப் பாய்தலை ஒழியாத, வள்ளிலைப் பொழில் - வளமிக்க இலைகளாற் செறிந்த புட்பமாகரண்டம் என்னும் பூம்பொழிலின்கண், மகிழ்ந்து - மனமகிழ்ச்சிகொண்டு, புக்கதும் - புகுந்த செய்தியும், (எ - று.) ஆர்சுளை - பொருந்தியசுளை எனினுமாம். முறுகி விண்ட பலாக் கனி மிகுதியாகத் தேன்றுளித்தலால் என்க. பொறிகளுக்குப் பேரின்பததைப் பொழில் நல்கியதாகலின் மகிழ்ந்து புக்கதும், என்றான், |