அரசர் சுற்றத்தின் இயல்பு | 58. | கொதிநுனைப் பகழியான் குறிப்பி னல்லதொன் றிதுநமக் 2கிசைக்கென வெண்ணு மெண்ணிலா நொதுமலர் 3வெருவுறா நுவற்சி யாளர்பின் அதுவவன் பகுதிக ளமைதி வண்ணமே. | (இ - ள்.) பின் அது - அரசனுக்கு அடுத்ததாகிய; அவன் பகுதிகள் அமைதிவண்ணம் - அவனுடைய அரசர் சுற்றமாகிய அமைச்சர் படைஞர் முதலியோரது தன்மையை; கொதிநுனைப் பகழியான் - காய்ச்சிக் கூராக்கப்பட்ட நுனியுள்ள கணைகளை; யுடைய அரசன்; குறிப்பின் அல்லது யுடைய அரசன்; குறிப்பின் அல்லது - குறிப்பைத் தெரிந்து கொண்டால் அல்லாமல்; இது நமக்கு இசைக்க என - இதை நாம் சொல்வோமென்று; எண்ணும் எண்ணிலார் - எண்ணுகின்ற எண்ணத்தை யுடையவர்களல்லர்; நொதுமலர் வெருவுறா - அயலார்கள் அஞ்சுதலில்லாத; நுவற்சியாளர் - சொல்லையுடையவர்கள். (எ - று.) பயாபதி மன்னன் தன்னுடைய அமைச்சர் படைத்தலைவர் முதலாயினார் செய்யவேண்டியவைகளைக் குறிப்பினாற் புலப்படுத்துவன். அவ்வாறு குறிப்பினால் தெரிவியா தொழியின் அவர்கள் தம் விருப்பப்படி யாதினையும் புரியார். சொல்லார். எச்செயலினையும் அரசன் குறிப்பை யறிந்து கொண்டு அவன் கூறுதற்கு முன்னரே செய்து முடிப்பர்; அயலவர் அஞ்சுதற்கு இடனில்லாத சொல்லையுடையவர். கொதித்தல் பகைவரைச் சினத்தலுமாம். நொதுமலர் - பகைவரும் நண்பரும் அல்லாத அயலார். | (23) | | |
|
|