(இ - ள்.) சுரிந்த குஞ்சியன் - சுருண்ட தலைமயிரையுடையவனும், சுடரும் மேனியன் - ஒளிரும் உடல்படைத்தவனும், எரிந்த பூணினன் - ஒளிவீசும் அணிகளை அணிந்தவனும், இலங்கு தாரினன் - விளங்குகின்ற மலர்மாலையை அணிந்தவனும், வரிந்த கச்சையன் - வரிந்துகட்டிய கச்சையை உடையவனும் ஆகிய, ஒருவன் வந்து - (துருமகாந்தன் என்னும் பெயரையுடைய காவலன்) ஒருவன் தன்பால்வந்து, வண்டு - சிலாதலத்தின் மொய்க்கும் வண்டுகள், இரிந்துபாய - அகன்று ஓடுமாறு, இங்கு - இச்சிலாதலத்தின்மிசை, ஏறுக என்றதும் - நீ ஏறி அமர்வாயாக என்று முகமன் மொழிந்ததும், (எ - று.) குஞ்சியனும், மேனியனும், பூணினனும், தாரினனும், கச்சையனுமாகிய ஒருவன் என்க. மரீசியைப் புட்பமாகரண்டத்தே எதிர்கொண்டு போற்றிய துரும காந்தனை என்க. |