(இ - ள்.) மற்றவன் - அங்ஙனம் முகமன் மொழிந்த துருமகாந்தன், தனக்கு - தன்பால், உரைத்த மாற்றமும் - கூறியமொழிகளும், கொற்றவன் - பயாபதிவேந்தன், விட - ஏவாநிற்ப, கொம்பனார் சிலர் - பூங்கொம்பை ஒத்த அழகிய மகளிர்கள் சிலர், உற்ற - பொருந்திய, மங்கலக் கலங்களோடு - மங்கலப் பொருள்களோடு, உடன்முற்ற - ஒருங்கே வந்து தன்னைச் சூழ்தலானே, ஊண் தொழில் - பின்னர் உண்ணும் தொழில், முடிந்த - முற்றிய, பெற்றியும் - தன்மையும், (எ - று.) ஏறுக!, என்று கூறிய துருமகாந்தன் தனக்குக்கூறிய உரைகளும், பயாபதி மன்னன் பணியால் மகளிர்கள் வந்து மங்கலக் கலங்களைக் கொண்டுவந்து தன்னை உண்ணச் செய்த பெருமையும் (கூறினான் என்க). |