(இ - ள்.) பங்கயத்து அலர் செங்கண் - செந்தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையும், மாமுடி - சிறந்த முடியையும் உடைய, திங்கள் வண்ணனும் - திங்களைப்போன்ற வெண்ணிறம் படைத்த விசயனும், செம்பொன் நீள்குழை - செந்நிறப் பொன்னாலாகிய நீண்ட குண்டலங்களை அணிந்தவனும், பொங்கு வெண் திரை புணரி வண்ணனும் - பொங்குகின்ற வெள்ளிய அலைகளை எறியும் கடலின் நிறத்தை உடையவனுமாகிய திவிட்டனும், அங்கு வந்ததும் - அவ்விடத்தை அடைந்த செய்யும், அவர்கள் -அவ்விசய திவிட்டர்கள், சொற்றதும்-தனக்குச் சொன்ன மொழிகளும், (எ-று.) திங்கள் வண்ணனும், புணரி வண்ணனும் அப் பொழிலிடத்தே வந்து தன்னைக் கண்டு கூறிய முகமன் மொழிகளையும், (கூறினான் என்க.), |