594. எரியு 1மாணையான் குளிரு 2மீகையான்
3பெரியன் பெற்றியாற் 4சிறிய னண்பினா
னரியன வேந்தர்கட் கெளிய 5னாண்டையர்க்
குரிய னாங்குதற் கோடை யானையான்.

     (இ - ள்.) எரியும் ஆணையான் - வெய்தாகிய ஆணையையுடை யவன், குளிரும்
ஈகையான் - குளிர்ச்சியை நல்கும் வள்ளமையுடையான், பெற்றியாற் பெரியன் -
பண்புடைமையால் மிக உயர்ந்தவன், நண்பினால் - நண்பர்களுக்கு, சிறியன் - கீழாயவன,
வேந்தர்கட்கு - அரசர்களுக்கு, அரியன் - காண்டற்கும் அருமையானவன், ஆண்டையர்க்கு
எளியன் - அவன் குடைநீழற் கீழ் வாழ்வார்க்குக் காட்சிக்கு மிக எளியவன், ஓடை
யானையான் - முகபடாத்தையுடைய யானைப் படைமிக்க அப் பயாபதி மன்னன்,
ஓங்குதற்கு - இவ்வாற்றால் மேலும் புகழ் பெருகுதற்கு, உரியன் - உரியவனாவான்,
(எ - று.)
“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்.

     மீக்கூறு மன்ன னிலம்“ (திருக்குறள் 386) என்பவாகலின் இத்தகைய சிறப்புடைய
பயாபதி வேந்தன் பலராலும் மீக்கூறப்பட்டு ஓங்குதற்குரியன் என்றான் என்க.

( 22 )