598. வைய மின்புறின் 5மன்ன னின்புறும்
வெய்ய 6தொன்றுறிற் றானும் வெய்துறுஞ்
செய்ய கோலினாய் செப்ப லாவதன்
றைய தாரினா னருளின் வண்ணமே.
 
 

      (இ - ள்.) செய்ய கோலினாய் - செங்கோன் முறை தவறாத அரசனே;
ஐயதாரினான் - அழகிய மாலையணிந்த பயாபதி மன்னன், வையம் இன்புறின் - தன்குடை
நீழல் வாழ்வோர் இன்பம் எய்தும்பொழுது, தானும் இன்புறும் - அவர்கள் எய்திய
இன்பத்தைத் தான் எய்தியதாக எண்ணிமகிழு வான், வெய்யது ஒன்றுறின் - அங்ஙனமின்றி
அவர் யாதானுமொரு துன்பத்தை எய்தியபொழுது, தானும் வெய்துறும் - அது
பொறானாய்த்தானும் துன்புறுவான், மன்னன் அருளின் வண்ணம் ஏ - செங்கோன்
மன்னனாகிய பயாபதியின் அருட்பெருமை, செப்பலாவது அன்று - இங்ஙனமாகலின்
இயம்பும் எளிமைத்தன்று (எ - று.)

பயாபதி மன்னுயிரெல்லாம் தன்னுயிர் எனக் கொள்ளும் தண்ணருள் மிக்கான் ஆகலின்,
அவன் குடைநீழல் வாழ்வார் தம் மூழ்வழி வெய்துறுங்காற றானும் வெய்துறும்
இன்புறுங்காற் றானும் இன்புறும் என்றான் என்க.

( 26 )