(இ - ள்.) வையம் ஆள்பவன் புதல்வர் - உலகத்தை ஆட்சி செய்கின்ற பயாபதி மன்னனுடைய மைந்தர்களாகிய, வார்கழல் ஐயன்மார்கள் தம் - நீண்ட வீரக்கழலணிந்த விசயதிவிட்டர்களுடைய, அழகின் வண்ணம் - அழகினது தன்மை, (எத்தகையதெனில்?) கை அவாசிலை காமன் - கையின் கண் அவாவுதற்குக் காரணமான கரும்பு வில்லையுடைய மன்மதன், இங்கு இரு மெய்யினால் - இம்மண்ணுலகத்தே (விசய திவிட்டருடைய) இரண்டுடம் புகளின் வாயிலாய், வெளிப்பட்ட நீரது - உலகோர் கண்காணத் தோன்றிய தொரு நீர்மையை உடைத்து, (எ - று.) அழகின் வண்ணம் காமன் வெளிப்பட்ட நீரது என்க. உருவமில்லாத காமவேள் இரண்டு வேறு உடல்களிலே வெளிப்பட்டுத் தோன்றினாற் போன்ற அழகுடையர் விசயதிவிட்டர்கள் என்றான் என்க. |