பட்டத்து அரசிகள் இருவர் | 62. | 1ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர் மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார் சேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என் றேயுரை யிலாதவ ரிருவ ராயினார். | (இ - ள்.) அவர் ஆயிரர் - அத்தகையோர் பயாபதி மன்னன் தேவிமார் ஆயிரம்பேர் ஆவர்; அவர்க்கு - அவ்வாயிரம் மனைவியர்க்குள்ளும், அதிகம் தேவியர்-சிறந்த மனைவியர் ஆனவர்கள்; மாஇரு விசும்பினின் - மிகப்பெரிய விண்ணுலகத்தினின்றும்; இழிந்த மாண்பினார் - இறங்கினாற்போன்ற சிறப்பையுடையவர்களும்; சேய்இருந்தாமரைத் தெய்வம் அன்னர் என்று - செந்நிறமுடைய தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளைப் போன்றவரென்று இன்னோரன்ன; ஏய்உரை இலாதவர் - கூறப்படும் உவமைச் சொல் எடுத்துக் கூறற்கு இடமில்லாதவர்களும் ஆகிய; இருவர் ஆயினார் - இரண்டுபேர் உளர்ஆனார்கள். (எ - று.) அதிகத்தேவி - மிக்க பெருமையுடையதேவி - கோப்பெருந்தேவி என்க. மா - இரு : மாயிரு : பொதுவிதிப்படி ‘மாவிரு’ என்று வகரவுடம்படுமெய்பெறாது, (நன். சூ. 239) “இடையுரி“ என்ற புறனடைச்சூத்திரத்தின்படி மா என்பது உரிச்சொல்லாதலின் யகரவுடம்படுமெய் தோன்றிற்று. “சேயிருந்தாமரைத் தெய்வம் அன்னர் என்றே உரையிலாதவர்“ என்று குறிப்பிடுகின்றபடியினால் அம்மலரில் எழுந்தருளிய கலைமகளினுஞ் சிறந்த கல்வியறிவுடையவரென்றும் திருமகளினுஞ் சிறந்த பேரழகுடையவ ரென்றும் பொருள் கொள்ளலாம். | (27) | | |
|
|