624. தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப்
பின்னை 2வேறல் 3பிறர்க்கரி தாதலான்
மன்ன மற்றவ னாளும் வரைப்பகம்
பொன்னின் மாரி பொழிந்திடு 4நன்றரோ  

     (இ - ள்.) தன்னை வென்ற தார்வய வேந்தனை - உட்பகையாய அறுவகைக்
குற்றங்களையும் வென்று மேம்பாடுற்று வாகைசூடிய வலிமைமிக்க அரசனை, பிறர்க்குப்
பின்னை வேறல் அரிது - பிற பகை மன்னர்களுக்குப் பிறகு வெல்லுதல் இயலாதாம்,
ஆதலால் - அங்ஙனம் ஆதலால், மற்றவன் ஆளும் வரைப்பகம் - தன்னை வென்ற
அம்மன்னவன் ஆளும் நாட்டின்கண், நன்று பொன்னி்ன் மாரிபொழந்திடும் - நன்கனம்
பொன்மழை பொழிந்து வளம் செய்யும், (எ - று.)

     பொன்மழை பொழியும் என்றது செல்வங்கொழிக்கும் என்றபடி, இனி, பருவப்புயல்
தவறாமற் பெய்யின் செல்வம் மிகும் ஆதலின் அப்புயலைப் பொன்மழை என்றார் எனினும்
பொருந்தும். உட்பகை களைந்த உரவோரை நட்போரன்றிப் பகைப்போரின்மையின்
ஒரோவழி ஒரு சிலர் உளராயவழியும் அவரை வேறல் அரிதாயிற்று. பிறக்கு என்பது
பாடமாயின் அசையாக்கிப் பகைவர்க்கென வருவித்துரைத்துக் கொள்க.
 

( 52 )