(இ - ள்.) மாசுஇல் வண்டு அன்னதோள் மன்ன - குற்றமற்ற தூண்போன்ற தோளையுடைய வேந்தே!, கொற்றவன் - ஓரரசன், மன்னிய கோசுஇல் தண்டத்தன் ஆய்விடின் - தன்பால் நிலைபெற்ற (அறுவகைக்) குற்றங்கள் இல்லாத செங்கோலனாகிவிட்டால், ஏசு இறு அண்டம் பரவ - குற்றந்தீர்ந்த வானவருலகம் தன்னைப்புகழும்படி, ஆசு இல் தண்டத்தனாய் - குற்றமில்லாத படைப்பெருக்கமும் உடையனாய், இவ்வையகம் இனிது ஆளும் - இவ்வுலகத்தை இனிதாக ஆளாநிற்பன், (எ - று.) தண்டு - தூண். கோச - குற்றம். ஏசு - குற்றம், மாசு - குற்றம். ஆசு - குற்றம். ஏசு இறு அண்டம் என்றது வானவருலகத்தை. கொற்றவன் உட்பகை களைந்து செங்கோலனாகிவிடின் அவனை அமரர் வாழ்த்துவர். அவனுடைய படைஞரும் நல்லர் ஆகுவர், உலகம் அவன் அடிதழுவி இனிது வாழும் என்றவாறு. இச்செய்யுள் சில ஏட்டுச் பிரதிகளில் இல்லை. |