அச்சுவகண்டன் நிமித்திகன் கூற்றைத் தடுத்தல்
633. முத்த நீண்முடி யான்முன்ன மற்றதற்
கொத்த 2வாறுணர்ந் தீயென வென்செயு
மைத்த கைமனத் தன்மனித் தான்னெனக்
கைத்த லங்கதிர் வீச மறித்தனன். 

     (இ - ள்.) முத்த நீண்முடியாய் - முத்துமாலை சூட்டப்பெற்ற நீண்ட முடியுடைய
வேந்தே!, முன்னம் மற்றதற்கு ஒத்தவாறு உணர்ந்தீ!, என - அப்பகை மூள்வதற்கு
முன்னரே அதனை வெல்வதற்கேற்றதொரு வழியை நீ அறிந்து கடைப்பிடித்தருள்க என்று
நிமித்திகன் கூறினானாக, என் செய்யும்! மைத்தகை மனத்தான் மனித்தன் என -
அச்சுவகண்டன், ஆ, என்னை மைபோலும் இருள் மனத்து எளிய மானுடன் ஆகிய
அத்திவிட்டன் செய்யக்கிடந்த தென்னை! என்று கூறி, கைத்தலம் கதிர்வீச மறித்தனன் -
கைகளின் அணிகள் ஒளிக்கற்றை காலுமாறு தடுத்தான், (எ - று.)

     தான் விஞ்சையன் ஆகலின் மனித்தன் என இகழ்ந்து கூறினான். உணர்க என்னும்
முன்னிலை ஏவல் வினைக்கண் ஈ அந்நிலை மரபின் மெய்யூர்ந்து உணர்ந்தி என வந்தது.
 

( 61 )