அச்சுவகண்டனின் சினமொழிகள்
635. மாசி லாலவட் டத்தெழு மாருதம்
வீச விண்டொடு மேருத் 3துளங்கமோ 
பேசின் மானிடப் பேதைக ளாற்றலா
லாசி றோளிவை தாமசை வெய்துமோ.
 

     (இ - ள்.) மாசில் ஆலவட்டத்து எழும் மாருதம் வீச - அழுக்கில்லாத விசிறியால்
எழுப்பப்பட்ட காற்று வீசுதலாலே. விண்தொடு மேரு துளங்குமோ! - விசும்பைத்
தொடுகின்ற மேருமலை அசையுமோ!, பேசின் மானிடப்பேதைகள் ஆற்றலால் - ஆராய்ந்து
கூறுங்கால், மனிதர்களாகிய அறிவிலிகளின் வலியால், ஆசில்தோள் இவைதாம் அசையுமோ
- குற்றமற்ற என் தோள்களாகிய இவை அசைந்து விடுமோ!, (எ - று.)
விசிறியா லெழுப்பப்படும் காற்றுத் திண்ணிய மேருவினை என்செய்யும் என்றான் என்க.
இதனால் தன் பெருமைக்கும் அவர் சிறுமைக்கும் உவமை கூறினான்.
 

( 63 )