இதுவுமது
653. மூரி முழாவொலி விம்மி முரன்றெழு
காரி 3மிழார்கலி யான்மயி லாலுவ
சோரி முழாவிழ விற்றெரு 4துற்றபின்
சீரி மிழாற்பொலி 5வெய்தினர் சென்றே.
 

      (இ - ள்.) மூரிமுழா ஒலிவிம்மி - பெரிய முழாவென்னும் தோற்கருவி யின் ஒலி
மிகுதலாலே, முரன்று எழு கார் இமிழ் ஆர்கலியான் - ஒசையுடனே வெரீஇ எழுகின்ற
முகில்களின் இடி முழக்கத்தாலே, மயில் ஆலுவ - மயில்கள் களித்து ஆடாநிற்கும்,
சோரிமுழா விழவில் - குருதிப்பலி கொள்கின்ற முரசம் முழங்குதற்குக் காரணமான திருவிழாவையுடைய, தெருதுற்றபின் - அந்நகரத்துத் தெருவை அத்தூதர்கள்
எய்தினபின்னர் ஆண்டெழும், சீர் இமிழால் - சிறந்த இசைப்பாடலைக் கேட்டலாலே,
சென்று பொலிவு எய்தினர் - அத்தெருவினூடே சென்று மகிழ்ச்சியால் விளங்கினர்,
(எ - று.)
     விம்மி - விம்ம. முழவு விம்ம முகில் முரன்று எழும் என்க. சீர் இமிழ் - சீரமைந்த
இசைப்பாடல்.

     மயில் ஆலுவனவாகிய தெரு. விழவினையுடைய தெரு என்று தனித்தனி கூட்டுக.

( 81 )