(இ - ள்.) மூரிநடை களியானை மதத்தினொடு - பெருமை தங்கிய நடையையும் களிப்பையும் உடைய யானைகளின் மத நீரோடு, ஏரின் - அழகினையுடைய, நடைக்கலிமா விலாழியும் - நடையமைந்த குதிரைகளின் வாய் நுரையும், ஓரி - தத்தம் படுக்கையிடங்களிலே, உகுத்த பெருங்கடை - சிந்தப்பட்ட பெரிய முன்றில்கள், வேரி வெறிக்களம் - மணமுடைய வெறியாடு களங்களை, ஒப்பது கண்டார் - ஒத்திருத்தலைக் கண்டு போயினர், (எ - று.) மூரி - பெருமை. யானைநடை கண்ணியமானது ஆகலின் மூரிநடை என்றார். ஏரின் - அழகினையுடைய. கலிமா - குதிரை; தம் : அசை. விலாழி - வாய்நுரை. ஓரி - விலங்கின் படுக்கை. பெருங்கடை - பெரிய முன்றில். வேரி - மணம். வேன்மகன் முருகனுக்கு வெறியாடும் விழாக்களத்தே தெய்வமுற்று ஆடுவோர் பூமாலைகளை யாண்டும் வீசுதலால் அக் களமெங்கும் அம்மாலைத் துணுக்குகள் கிடப்பன போன்று. குதிரை விலாழியும் யானைமதமுத் சிந்திக்கிடக்கும் முன்றில்கள் தோன்றுகின்றன என்க. |