இதுமுதல் 3 செய்யுள்கள் தூதர்கள் கூறும் செய்தி

663. ஊடக மோடி யெரிந்தொளி முந்துறு
மாடக மாயிர கோடியு மல்லது
சூடக முன்கையர் 1தோடக மெல்லடி
2நாடக ராயிர 3நாரியர் தம்மையும்.
 

     இது முதல் மூன்று செய்யுள் குளகம்

     (இ - ள்.) அகம் ஊடு ஒளி ஓடி எரிந்து முந்துறும் ஆடகம் - அகத்தினூடே
ஒளிபாய்ந்து மிளிர்ந்து திகழும் பொன், ஆயிர கோடியும் - ஓர் ஆயிரங்கோடியும், அல்லது
- அன்றியும், சூடக முன்கையர் அகம்தோடு மெல்லடி - வளையலணிந்த
முன்கையையுடையாரும் அகவிதழ்போன்ற மெல்லியல் அடிகளையுடையாரும் ஆகிய,
ஆயிரம் நாடக நாரியர் தம்மையும் - ஓராயிரம் கூத்தியல் அறிந்த விறலியரையும்,
(எ - று.)
     அல்லது எனல் வேண்டிய உம்மை தொக்கது.
 

( 91 )