664. தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதி
4ரெண்டர ளம்பவ ழக்கொடி யீட்டமும்
கண்டிரள் முத்தொடு காழகி 5லந்துகில்
பண்டரு 6நீரன வும்பல பண்டமும்.  
 

     (இ - ள்.) தெண்டிரை சிந்திய சங்கொடு - தெளிந்த திரையெறி கடல்தந்த
சங்குகளோடு, செங்கதிர் பவழக்கொடி எண்தரளம் ஈட்டமும் - சிவந்த ஒளியையுடைய
பவழக்கொடியும் ஆராய்ந்த முத்துமாகியவற்றின் குப்பையும், கண்டிரள் முத்தொடு -
மூங்கில் முதலியவற்றின் கணுக்களிலே தங்கித் திரண்ட முத்துக்களோடு, காழ் அகில் -
நிறமமைந்த அகிலும், அந்துகில் - அழகிய ஆடையும், பண்தரு நீரனவும் - இசைக்
கருவிகளும், பல்பண்டமும் - இன்னோரன்ன வேறு பல பண்டங்களும், (எ - று.)

     எண்டரளம் கடல்படுமுத்தென்றும் கண்டிரள்முத்து மூங்கில் கரும்பு முதலியவற்றில்
விளைந்த முத்தென்றும் கொள்க. பண்டரு நீரன என்றது யாழ்முழவு முதலிய இசைக்
கருவிகளை.

( 92 )