674. அணிமுழா வனைய தோளா னருளிய தறிந்த போழ்தின்
மணிமுழாச் சிலம்பக் கொண்ட மண்டல வரங்கி னங்கண்
2குணிமுழாப் பெயர்த்த பாணி 3குயிற்றுத லிலயங் கொண்ட
4கணிமுழா மருங்குற் கலிப்பிவை தலிர்த்துச் சென்றார்.

     (இ - ள்.) அணி முழா அனைய தோளான் - அழகிய மத்தளமொத்த திரண்ட
தோள்களையுடைய பயாபதி மன்னன், அருளியதறிந்த போழ்தின் - கட்டளையிட்ட
செய்தியை அறிந்தவுடனே, மண்டல அரங்கின் - வட்ட வடிவமான நாடக அரங்கிடத்தே
அங்கண் குணிமுழா - அழகிய கண்ணையுடைய ஆராய்ந்தறிதற்குக் காரணமான
முழவென்னும் இசைக் கருவியினின்றும், பெயர்த்த பாணிகுயிற்றுதல் - எழீஇய இசைக்குப்
பொருந்தத் தாளம் அமைத்தலையும்; இலயம் கொண்ட கணிமுழா மருங்குல் -
சுதிசெய்யப்பட்டு நன்கு உணர்ந்தறிந்த முழாவின் பக்கத்தே, பாடற் கலிப்பு இவை - குரல்
எழீஇப்பாடும் இன்னிசைப் பாடலால் உண்டாகும் முழக்கமாகிய இவற்றை எல்லாம்,
தவிர்த்துச் சென்றார்-ஒழித்துப் புறப்படுவார்களானார், (எ - று.)

     பயாபதியின் கட்டளையைப் பெற்ற மகளிர்கள் அரங்கிடத்தே குயிற்றுதல், பாடற்கலிப்பு இவையிற்றை அவித்துப் போயினர் என்க.
 

( 102 )