திவிட்டன் அந்நிகழ்ச்சியை வினாதல்
679. என்னிது விளைந்த 4வாறித் தூதுவர் யாவ ரென்று
கன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ணன் வினவ யாரும்
சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க வாங்கோர்
கொன்னவில் பூதம்போலுங் 5குறண்மக னிதனைச் 6சொன்னான்,
 

     (இ - ள்.) கல்நவில் வயிரத் திண்டோள் - கல்லைஒத்த உறுதியுடைய திண்ணிய
தோள்களையுடைய, கடல்வண்ணன் - கடல்போன்ற நீலநிறத்தை யுடையவனான திவிட்டன்;
என் இது விளைந்தவாற - இந்நிகழ்ச்சிக்குக் காரணம் யாது?, இத்தூதுவர் யாவர் - இந்தத்
தூதுவர் யார்? என்று வினவ - என்று அங்கு நிற்கின்றவர்களைக் கேட்ப; யாரும் சொல்
நவின்றுரைக்க மாட்டார் - அங்கு நிற்கின்றவருள் ஒருவரேனும் அக்கேள்விக்கத் துணிந்து சொல் விடுத்து மறுமாற்றங்கூற மாட்டாதவராய், துட்கு என்று துளங்க - இனி யாதாங்
கொல்; என அஞ்சித்துடுக்கென்று நடுங்கா நிற்ப, ஆங்கோர் கொல்நவில் பூதம் போலும்
குறள்மகன் - அவ்விடத்தே நின்ற கொலைத் தொழில்வல்ல பூதத்தை ஒத்த ஒரு குறளன்
துணிவுகொண்டு, இதனைச் சொன்னான் - பின் வருமாறு சொல்வானாயினான், (எ - று.)

     திவிட்டனுக்கு விடைகூற எல்லாறும் அஞ்சவும், துணிந்து கூறிய குறள்மகன்
தறுகண்மை தோன்ற, “கொன்னவில் பூதம் போலும் குறள் மகன்“ என்றார். மகளிருடைய
கூனரும் குறளரும் இருத்தல் வழக்கம்.
இத்தூதுவர் யார்? இது விளைந்தவாறு என்? என்று திவிட்டன் ஆண்டு நின்றாரை வினாவ
அவர்கள் அஞ்சி உரைகொடாது நிற்பப் பூதம் போலும் குறள்மகன் சொன்னான் என்க.

( 107 )