(இ - ள்.) முடித்தலைமுத்து உதிர்ந்தாங்கு - முடியின்கண் உள்ள முத்துக்கள் உதிர்வதைப்போல, சிறுவியர்புள்ளி நெற்றி மேற் பொடித்தன - சிறிய வியர்வையாலுண்டாகிய புள்ளிகள் போன்ற நீர்த்துளிகள் தோன்றி உதிர்ந்தன; செங்கணும் - சினத்தாற்சிவந்த கண்களும், ஒள்ளெரி அடுத்து எழுசுடரகத்து - ஒளியுடன் பற்றி எரிகின்ற நெருப்பினுள்ளே, உக்க - பெய்யப்பட்ட, நெய்த் துளிகடுத்த - நெய்த் துளியை ஒத்த; நீர்த்திவலை கான்றவே - வெப்பமுடைய நீர்த்துளிகளைச் சிதறின, (எ - று.) நெய்த்துளி கடுத்த நீர்த்திவலை என இயைத்துக்கொள்க. நம்பியின் நெற்றிமேல் சிறுவெயர்ப்புள்ளி முத்துதிர்ந்தாங்கு பொடித்தன, கண்ணும் நீர்த்துவலை கான்றன என்க. |